tamilnadu

img

ஒரு கிராம் தங்கம் கூட மாயமாகவில்லை

திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகை கள் மற்றும் வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். காணிக்கை யாக செலுத்தப்படும் பணம் அவ்வப் போது கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். தங்கம், வெள்ளி பொருட்கள் பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளா வில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாது காப்பு அறையில் வைக்கப்பட்டு கண் காணிக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 3 கணக்கு தணிக்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகைகள் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அறையில் பாது காக்கப்பட்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமானதாக தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு
பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதி காரிகள் அந்த அறையில் சோதனை நடத்தினர்.

அப்போது தங்கம் வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களின் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக முறை யாக தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கணக்கு தணிக்கை அதிகாரிகள் மீண்டும் அந்த அறையில் சோதனை நடத்தி தங்கம், வெள்ளி உள்பட பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து தேவஸ்தான த்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர், ஆரன்முளையில் பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பாது
காப்பாகவே உள்ளது. இதில் இருந்து ஒரு கிராம் தங்கம் கூட மாயமாக வில்லை என்றார்.