திருவனந்தபுரம், செப். 2- கேரளத்தின் பல்வேறு விமான நிலை யங்களிலிருந்து 39 உள்நாட்டு விமான சேவை களை புதிதாக துவக்கப்பட உள்ளன. முதல்வர் பினராயி விஜயனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டிய விமான போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்ப டையில் இந்த விமான சேவைகள் துவங்க உள்ளன. விமான நிறுவனங்கள் சார்பில் மாநில அரசுக்கு இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தி லிருந்து மட்டும் 23 சேவைகள் துவக்கப்பட உள்ளன.