tamilnadu

img

கேரள அரசு மூலம் 4 ஆண்டுகளில் வழங்கியது 1,33,132 வேலைகள்: எம்.பி., ராஜேஷ்

திருவனந்தபுரம், ஆக.4- கேரளத்தில் வேலை நியமனங்கள் குறித்து எதிர்க்கட்சியும் ஒருபகுதி ஊடகங்களும் திட்ட மிட்ட அமைப்பு ரீதியிலான பொய் பிரச்சாரம் நடத்தி வருகின்றன. உண்மையில் நடப்பது என்பதை முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் தேசாபிமானி நாளிதழின் ‘ட்ரூ ஸ்டோரி’ என்கிற காணொலி நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தியுள்ளார். கேரளத்தில் அரசு பணி நியமனங்களில் வெறும் பார்வையாளராக பிஎஸ்சி (தேர்வாணை யம்) உள்ளது என எதிர்க்கட்சிகளாலும், ஒரு சில ஊடகங்களாலும் பெரும் பிரச்சாரம் நடத்தப்படு கிறது. இதில் உண்மை இல்லை என்பதை புள்ளி விவரங்கள் தெளிவு படுத்துகின்றன. 2016 ஜூன் முதல் 2020 ஏப்ரல் வரை எல்டிஎப் அரசு பிஎஸ்சி மூலம் 1,33,132 வேலை வழங்கியது. யுடிஎப் ஆட்சி யில் 2011 ஜூன் முதல் 2015 ஜூன் வரை நான்கு  ஆண்டுகளில் வழங்கப்பட்டது 1,23,104 வேலை கள். யுடிஎப் வழங்கிய வேலை வாய்ப்பைவிட எல்டிஎப் அரசு கூடுதலாக 10,028 வேலை வாய்ப்பு களை அளித்துள்ளது.

மலையாளம் உதவி பேராசிரியர் பணிக்கான பிஎஸ்சி பட்டியலில் எனது மனைவியின் பெயர் இடம் பெற்றிருந்தது. பிரச்சாரம் என்னவாக இருந்தது. எம்.பி.ராஜேஸின் மனைவியின் பெயர் பட்டியலில் உள்ளதால் அதன் காலக்கெடு நீட்டிக் கப்படும். புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு அவருக்கு வேலை கிடைத்துவிடும் என்பதாக நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் வீடியோ காட்சிகள் என்னிடமே வந்தன. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்த தேர்வு 2011 இல் யுடிஎப் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டதாகும். ஆனால் நியமனங்கள் 2016 இல் எல்டிஎப் ஆட்சிக்கு வந்த பிறகே நடந்தன. அந்த பட்டியலின் காலக்கெடு முடியப்போகிறது. இதன் பொருள் யார் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தல்ல, எந்த ஒரு அரசியல் அடிப்படையிலும் அல்ல இந்த முடிவுகள் எடுக்கப்படுவது அல்ல.

16,508 புதிய பணியிடங்கள்
எல்டிஎப் அரசு 16,508 புதிய பணியிடங்களை உருவாக்கியது. இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 10,054 பேருக்கு வேலைக்கான பரிந்து ரையை பிஎஸ்சி வழங்கியுள்ளது. இதே காலத் தில் 54 தகுதி பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இத ல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 18,119 பிஎஸ்சி மூலம் நியமனம் நடந்துள்ளது. ஆனால் இவற்றை புறவாசல் நியமனங்கள் என எதிர்க்கி றார்கள். பிஸ்சி மூலம் நியமனம் செய்யப்படாமல் இருந்த 54 நிறுவனங்களுக்கான நியமனங்கள் பிஎஸ்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு பிரச்சாரம் தற்காலிக நியமனங்கள் குறித்து நடக்கிறது. அதில் உள்ள உண்மையான நிலவ ரம் 2012 இல் யுடிஎப் நியமனம் செய்த தற்காலிக ஊழியர்கள் 31,899 பேர். இப்போது வெறும் 11,674 மட்டும். இதன்படி சுமார் 70 சதவிகிதம் தற்காலிக நியமனங்களை எல்டிஎப் அரசு குறைத்துள்ளது.

உண்மை என்னவென்றால், சிவில் போலீஸ் அதி காரி பிரதான பட்டியலில் இடம்பெற்றவர்கள் 7577 பேர். அதில் இதுவரை நியமனத்துக்கான பரிந்துரை செய்யப்பட்டவர்கள் 5601 பேர். 2425 பேர் பரிசீலனையில் உள்ளனர்.  வழக்குகள், கோவிட் போன்ற சில காரணங்க ளால் பரிந்துரை அளிப்பதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 4933 புதிய பணியிடங்களை காவல்துறையில் இந்த அரசு உருவாக்கியுள்ளது. பிஎஸ்சி தகுதி பட்டியலில் இடம்பெற்ற அனை வருக்கும் வேலை கிடைத்து விடாது என்பது நீண்ட கால நடைமுறை. இதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்கிற புதிய விவாதங்கள் இப்போது எழுந்துள்ளன. பணியிடங்கள் எத்தனையோ அந்த எண்ணிக்கையிலான பட்டியல் வெளி யிட்டால் போதும் என்பது அதில் ஒன்று. தற்போதுள்ள நடைமுறையின்படி பட்டிய லில் இடம்பெற்றும் பரிந்துரை கிடைக்கப் பெறாத வர்களுக்கு கவலை ஏற்படும்.

அவர்கள் பட்டிய லின் கால அளவை நீட்டிக்க வேண்டும் என கோரு வது இயல்பு. ஆனால் இதை தங்களுக்கு சாதக மாக்க எதிர்கட்சிகளும் சில ஊடகங்களும் முயற் சிக்கின்றன. பட்டியலின் கால அளவு நீட்டித்தால் புதிதாக தேர்வு நடத்த முடியாமல் போகும். வாய்ப்புக் காக காத்திருக்கும் இளைஞர்களிடையே  போராட்டம் எழும். அதனால்தான் எல்டிஎப் அரசு கொள்கை அடிப்படையில் எடுத்துள்ள சரியான முடிவு எந்த ஒரு பிஎஸ்சி பட்டியலின் கால அளவையும் நீட்டிப்பதில்லை என்பதாகும்.

மத்திய அரசு வேலை
கேரளத்தில் இப்படி என்றால் மற்ற மாநி லங்களின் நிலை குறித்தும் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் உள்ள ராஜஸ் தான் பிஎஸ்சி இணைய தளத்தில் உள்ள 2018-19 இல் அங்கு நடந்துள்ள நியமனம் 8640. ராஜஸ்தான் பிஎஸ்சி உருவான 50 ஆண்டுகளில் அங்கு நடந்துள்ள ஒட்டுமொத்த நியமனம் 2,83,240. காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் நிலைமை இது. அருகில் உள்ள தமிழ்நாட்டில் 2018-19 இல் டிஎன்பிஎஸ்சி இணையதள கணக்கின்படி 17648 பேருக்கு மட்டுமே நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. கேர ளத்தின் ஆண்டு சராசரி நியமனம் 33,283. இதில் பாதி அளவே தமிழ்நாட்டின் நியமனம். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு (எண்.4128) 18.3.2020 அன்று பிரதமர் அலுவலக பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜிதேந்திர் சிங் பதில் அளித்துள்ளார். அதில் 6,83,823 பணியிடங்கள் மத்திய அரசில் காலியாக உள்ளன. அதாவது 18 சதவிகிதம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  மேலும் மோடி ஆட்சியில் 2015-16 இல் யுபிஎஸ்சி மூலம் 6824 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக 2018-19 ஆம் ஆண்டின் கணக்கு 1242 ஆக வீழ்ச்சி அடைந் துள்ளது. எஸ்எஸ்சி-யின் 2016-17 கணக்கின்படி 68,880 பேருக்கு நியமனம் கிடைத்தது. 2019-20 இல் 13,995 நியமனங்களாக செங்குத்தாக குறைந் துள்ளது. ரயில்வேயில் 2015-16 இல் 81,086 பேருக்கு வேலை கிடைத்தது. 2018-19இல் வெறும் 7325 பேருக்கே வேலை கிடைத்தது.

பறிபோகும் எஸ்சி/எஸ்டி, ஓபிசி வேலைகள்
இதுகூட இனிமேல் கிடைக்காது. காரணம் ஒரு மாதம் முன்பு ரயில்வே பணி நியமனம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொடுத்துள்ள கணக்குகள். 2018-19 இல் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே கணக்குகளின் படி 22,562 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.  கேரளத்தில் பிஎஸ்சியின் சராசரி ஆண்டு நியமனம் 33,283 என்கிற வேறுபாட்டை பார்க்க வேண்டும். மேலும் ஜிதேந்திர் சிங் அளித்துள்ள பதிலில் மற்றொரு ஆபத்தான அறிவிப்பும் உள்ளது. அது, காலிப்பணியிடங்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் நிரப்பப்படாமல் இருந்தால் அவை சுயமாகவே நிறுத்தப்பட்ட பணியிடங்களாக கருத்தப்படும் என்பதாகும். அதன் பொருள் 6.38 லட்சம் காலிப்பணி இடங்களில் என்றென்றும் இல் லாமல் போவது பல லட்சங்கள் பணியிடங்கள் என்பதாகும்.

இதில் பெரும் இழப்பை சந்திக்கப் போவது எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் 4.4.2020 அன்று சமூக நீதித் துறை துணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரிய அளித்த பதிலில், எஸ்சி பணியிடங்களில் காலி இடங்கள் 22,592. அதில் நிரப்பப்பட்டது 17,097, நிரப்பப்படாதது 9,465 (40 சதவிகிதம்). ஓபிசியில் காலியிடங்கள் 27,377. அதில் 14,705 இடங்கள் நிரப் பப்பட்டன. நிரப்பப்படாதது 12,632 (40 சதவிகிதம்).  இதன் மூலம் பிஎஸ்சி மூலம் மிக அதிக அளவில் நியமனம் நடப்பது கேரளத்தில் தான் என்பது தெளிவாகிறது. புறக்கடை வழி நியமனம் என கூரைமீதேறி கொட்டி முழக்குகி றார்கள். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் வேலை வாய்ப்பகம் மூலம் 43,842 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டது. இவை புறக்கடை நியமனங்கள் அல்ல. யுடிஎப் ஆட்சி காலத்தில் காலிப்பணியிடங்கள் அறி விக்கப்படாமல் இருந்தன. அரசின் மீது குற்றம் சாட்டுவோர் இந்த உண்மைகளை உணர வேண்டும். ஒரு பகுதி ஊடகத்தினருக்கு சிபிஎம்- முடன் அடங்காத பகை. அந்த பகை தீர்க்க பிஎஸ்சி பட்டியலில் இடம்பெற்று வேலை கிடைக்காமல் போனவர்களின் ஏமாற்றத்தை பயன்படுத்துகின் றன. ஆனால் உண்மையை மக்கள் அறிந்து கொள்வார்கள். கேரளத்தில் வேலை கிடைத்த 1,33,132 பேர் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

;