tamilnadu

img

நிலவில் தாதுக்கள் குறித்து சந்திராயன் - 2 ஆய்வு

திருவனந்தபுரம்:

சந்திராயன்-2 குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி.மாதவன் நாயர் கூறியதாவது:


ஜூலை 9 முதல் 16 ஆம் தேதிக்குள்ளாக சந்திராயன்-2 திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திராயன்-2 செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவுக்கு சென்றடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமான திட்டமாகும். இதன்மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. 


ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம் மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். 2013-இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;