tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 54 கோவிட் நோயாளிகள் வெளியில் இருந்து வந்தோர் 48; குணமடைந்தது 56 பேர்

திருவனந்தபுரம், ஜுன் 14- கேரளத்தில் சனியன்று புதிதாக 54 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 23 பேர் வெளிநாடுகளில் இருந் தும் 25 பேர் இதர  மாநி லங்களில்  இருந்தும் கேர ளத்துக்கு வந்தவர்கள். தொட ர்புகள் மூலம் 3 பேருக்கு  நோய் தொற்று ஏற்பட்டுள் ளது. மேலும் 3 சுகாதார ஊழி யர்களுக்கும் நோய் தொற்று  ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த வர்களில் 56 பேர் ஞாயிறன்று குணமடைந்தனர். இது வரை 1101பேர் குணடைந்துள் ளனர். தற்போது 1340 பேர் சிகிச்சையில் உள்ளனர். விமானம் மூலம் 71,595 பேரும் கப்பல் மூலம் 1621 பேரும், சாலை வழியாக  1, 39,749 பேரும் ரயில் மூலம்  27,312 பேர் உட்பட கேரளத் துக்கு மொத்தம் 2,40,277 பேர் வந்துள்ளனர். மாநி லத்தின் பல்வேறு மாவட்டங் களில் 2,42,767 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 2,40,744 பேர்  வீடுகள்-நிறுவன கண்கா ணிப்பிலும் 2033 பேர் மருத்து வமனைகளிலும் கண்கா ணிப்பில் உள்ளனர். ஞாயி றன்று 224 பேர் மருத்துவ மனைகளில் அனும திக்கப்பட்டனர். ஞாயிறு காலை வரை 24  மணி நேரத்தில் 4848 மாதிரி கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 1,12,962 நபர்களின் மாதிரி கள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 2851 மாதிரிகளின் முடிவு நோய் தோற்று இல்லை என வந்தன.  மேலும், சுகாதார ஊழி யர்கள், வெளிமாநில தொழி லாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரி வினிரின் 29,790 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 30,785 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என  உறுதியாகின. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1, 49,116 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. வெள்ளியன்று மேலும் 6  தீவிர நோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப் பட்டன. 13 பகுதிகள் தீவிர நோய் பரவல் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. தற்போது கேரளம் முழு வதுமாக 122 ஹாட் ஸ்பாட்டு கள் உள்ளன.

;