tamilnadu

img

குஜராத் சட்ட அமைச்சரின் தேர்தல் வெற்றியே செல்லாது- உயர் நீதிமன்றம் 

குஜராத்தில் சட்ட அமைச்சரின் தேர்தல் வெற்றி செல்லாது என்று குஜராத் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 
குஜராத்தில்  கடந்த 2017-ம் ஆண்டு நடந்த  சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியமைத்தது. டோல்கா தொகுதியில் போட்டியிட்டு 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூபேந்திரசின் சுதஸ்மா, காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோடை தோல்வியடைச் செய்தார்.
பின்னர், அம்மாநில சட்டத்துறை மற்றும் ல்வித்துறைஅமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.  இந்நிலையில் தேர்தலில் 429 தபால் ஓட்டுக்களை, விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளர் 2018, ஜனவரியில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கில் 78 முறை நடந்த விசாரணைகளில் தேர்தல் ஆணையம், அஷ்வின் ரதோட், சுதஸ்மா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று குஜராத் உயர் நீதிமன்றம் பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.