tamilnadu

img

தனி வட்டமாக அறிவித்தும் அஞ்செட்டியில் மாறாத அவலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து அஞ் செட்டி தனி வட்டமாக பிரிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது. சிறு மாற்றமும் இல்லாமல் மக்களின் வேதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 30  ஆயிரம் மக்கள் தொகை,  37 மலை  கிராமங்கள், இந்திரா காந்தி தொகுப்பு வீடுகள் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்டு குட்டிச்சுவர் களாகவும் இடிந்தும்  இடியாமலும் குடியிருக்கவே தகுதியற்ற 10, 15 அரசு தொகுப்பு வீடுகள் என  30 க்கும் மேற்பட்ட சிறு சிறு வசிப் பிடங்கள் மலைகளின் மடியிலும்,  காலடிகளிலும் சுருண்டு கிடக்கும் சித்திரமே அஞ்செட்டி வட்டம்.   ஓசூரிலிருந்து ஒகேனக்கல் செல்லும் பேருந்துகள் சுற்றுலா  வாகனங்கள் அனைத்தும் அஞ் செட்டியில் நின்று இளைப்பாரிய பிறகே  இவ்வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பகுதி மக்களின் அடிப்படையான, உரிமைகள், தேவைகள், வசதிகள்,  உட்பட கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகிறதா? பிரச்சனை கள் தீர்க்கப்படுகிறதா? என்றால் இல்லை.

45 கிலோ மீட்டர்...
வட்டார வளர்ச்சி அலுவலகம் அஞ்செட்டியில் இருப்பதற்கு பதி லாக மக்கள் யாரும் தொடர்பு கொள்ளாமலும், தொந்தரவு செய்யாமலும் இருக்க வசதியாக 45 கிலோ மீட்டர் தொலைவில் தேன்  கனிக்கோட்டை வட்டம் தளியில் உள்ளது. படித்தவர்களே அஞ் செட்டியிலிருந்து தளிக்கு பேருந்தில் சென்று வர மட்டுமே 4 மணி நேரம் ஆகும். அப்பாவிகள் கதி என்னாகும்? அஞ்செட்டியில் மட்டுமே காவல்  நிலையம் (பொது) ஒன்று உள்ளது. மகளிர் காவல் நிலையம் இல்லை. இருபத்தைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் தேன்கனிக்கோட்டையில் தான் உள்ளது. இந்த வட்டத்தில் அஞ்செட்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மலைப் பகுதி யில் உள்ள நாட்ராம்பள்ளி, உரிகம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் காவல் நிலையம் அவசியத் தேவை யாக உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார அலுவ லர்களிடமும் அதற்கான எந்த நட வடிக்கையும் இல்லை.  அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிறு, சிறு அறுவை சிகிச்சை  உட்பட எந்த வசதியும் இல்லை, விசப் பாம்புகள், பூச்சிகள், விலங்கி னங்கள், அதிகம் உள்ள மருத்துவ மனையில் அதற்கான மருத்து வத்திற்கு எந்த வசதியும் இல்லை. முதலுதவி மருந்துகள் கூட இல்லை.

பேருந்து நிலையம் ..
வானமே கூறையாகவும் தார்ச்சாலை மட்டுமே பேருந்துகள் நிற்கும் இடமாகவும் உள்ளது. மக்கள் வெட்ட வெளியில், தவிக்கும் வெயிலிலும், மழையி லுமே பேருந்துகளுக்காக காத்தி ருக்க வேண்டும். ஊரில் கழிவு நீர்  கால்வாய் என்று சொல்ல ஒன்று மட்டும் பிரதான சாலையில் இப்போது தான் கட்டப்பட்டது. வேறு  எங்கும் கழிவு நீர் கால்வாய்கள் கிடையாது.கடும் குடிநீர் பிரச்சனை உள்ளது. நவீன கழிப்பறை வளாகம் 8  மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக் கப்பட்டு அமைச்சரால் திறப்பு விழாவும் நடத்தப்பட்ட பிறகும் திறக்கப்படாமல் நாய்கள் மட்டுமே குடியிருக்க பயன்பட்டு வருகிறது.  கிணற்றில்போட்ட கல்லாக.... பொதுமக்களும், கடைக்காரர்க ளும், சாலையில் கடைகள் வைத்துள்ள நடைபாதை வியாரி களும், பெண்களும் இயற்கை உபாதைகளுக்கு இடமில்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளோ சிறிதும் அக்கரை இல்லாதிருக்கிறார்கள்.இந்த கழிப்பறை வளாகத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட  வேண்டும், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், என மூன்று  முறை மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயி கள் சங்கம், சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. கிணற்றில் போட்ட கல்லாய் மனுக்களும், அரசு அதிகாரிகளும் அசைவற்ற நிலையே தொடர்கிறது . பல ஊர்களுக்கு பேருந்து வசதி கள் இல்லை. அரசு கட்டிக் கொடுத்த  பெரும்பாலான சிறு சிறு குடி யிருப்புகளுக்கு நடந்து செல்ல பாதை கூட இல்லை. அரசு 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி நினைவு குடியிருப்புகள் திட்டத்தில் இந்த வட்டத்தில் 450  வீடுகள் கட்டித் தரப்பட்டது. 350க்கும்  மேற்பட்ட வீடுகள் இடிந்தும், குட்டிச்சுவர்களாகவும் காட்சி யளிக்கிறது.  எருமத்தனம் பள்ளியிலும், அரு கில் காட்டுக்குள் ஒத்தையடி பாதை  கூட இல்லாத அந்த குடியிருப்புகள் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல. ஒரு சில மின்கம்பங்கள் தவிர அனைத்தும் உடைந்தும், வளைந்தும், எலும்புக்கூடு போலவும் நிற்கிறது. மாதத்தில் பாதிநாட்களுக்கும் மேல்  மின்சாரம் வருவதே இல்லை. பெரும்பாலான கிராமங்களுக்கும் சாலை, குடிநீர், கழிப்பறை வசதி களே இல்லாமல் இருக்கும் வட்ட மான அஞ்செட்டி யில் மக்கள் வரு வாயை வைத்து வாழ்வதற்குப் பதி லாக வறுமையிலேயே வாழ்கி றார்கள்.