tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாற்றுத்திறனாளிகள் மனித சங்கிலி

கிருஷ்ணகிரி, பிப். 17- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் துவங்கப்பட்டு 10ஆம்  நிறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ஊத்தங்கரையில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. அப்போது தனியார் துறையிலும் மாற்றுத்  திறனாளிகளுக்கு 4 சதம் இட ஒதுக்கீடு வழங்க  அரசு சட்டம் இயற்ற வேண்டும், கிராமப்புற  100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும், 100 நாட்கள் வேலையை 200 நாட்க ளாகவும், கூலியை 400 ரூபாயாகவும் உயர்த்தி  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டத் தலைவர் திருப்பதி, செய லாளர் பெரியசாமி, பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் பழனி, குமார், வட்டச் செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி  வட்டச் செயலாளர் மகாலிங்கம் உட்பட கலந்து கொண்டனர். அதேபோல் தேன்கனிக்கோட்டையில்  நடைபெற்ற மனித சங்கிலியில் மாநில துணை தலைவர் பாரதி அண்ணா, மாவட்டத்  தலைவர் திருப்பதி, செயலாளர் பெரியசாமி,  வட்டச் செயலாளர் சீனிவாசன், தலைவர்  தியாகராஜன், பொருளாளர் மாரப்பா, சிபிஎம்  செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.