tamilnadu

கிருஷ்ணகிரி, வேலூர், புதுச்சேரி செய்திகள்

70 கிலோ மீட்டர் தூரத்தில் மகளிர் காவல் நிலையம்: மாதர் சங்கம் கண்டனம்

கிருஷ்ணகிரி, ஜூன் 21- கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை வட்டம் நீர் பாசன வசதி இல்லாததாலும், தொழிற்சாலைகள் இல்லா ததாலும் மக்களின் சராசரி வருவாய் மிக மிகக் குறை வாகும். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இந்நிலையில் மாதர்கள், இடதுசாரிகளின் தொடர் போராட்டத்தால் பெறப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில், அட்டை உள்ள 75 விழுக் காடு பெண்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால் முறையாக மாதா மாதம் ஊதியம் வழங்கப் படுவதில்லை. 6 மாதத்திற் கொரு முறை அல்லது வரு டத்திற்கு ஒரு முறை வழங்  கப்படுகிறது. அதுவும் 100,  120 ரூபாய் மட்டுமே வழங் கப்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஊத்தங்  கரை வட்டத்தில் அனைத்து  மகளிர் காவல் நிலையம்  அமைக்காமல் பர்கூர் பகுதி யில் அமைக்கப்பட்டதால், இங்குள்ள பெண்கள் ஏதா வது புகார் அளிக்க மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 70 கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. மேலும் பேருந்து கட்டண மாக 200 ரூபாய்க்கு மேல்  செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல  பெண்கள் புகார் அளிக்கவே  காவல் நிலையம் செல்வ தில்லை. எனவே ஊத்தங்கரை யில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க  வேண்டும் என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜெயராமன் ஆகி யோர் மாவட்ட ஆட்சிய ருக்கும், காவல் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பணியாளர் பற்றாக்குறையால் மின் பராமரிப்பு பணிகள் தாமதம்

வேலூர், ஜூன் 21- திருப்பத்தூரில் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் துறையின் பரா மரிப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்டு சிங்காரப்பேட்டை, குடியாத்தம், கொரட்டி, வெங்களாபுரம், சுந்தரம்பள்ளி, மட வாளம், குரிசிலாப்பட்டு, மிட்டூர், குனிச்சி, பேராம்பட்டு, விஷமங்கலம், திருப்பத்தூர் 1, 2,  வடக்கு, மேற்கு, புதுப்பேட்டை கிழக்கு, மேற்கு மற்றும் கந்திலி என மொத்தம் 17 பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் இங்கு பணியிலிருந்த கம்பியாளர், கள உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்றனர். ஆனால் அந்த பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால் பணியிலிருக்கும் பணியாளருக்கு விடுப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் பணியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சிறப்பு பராமரிப்புப் பிரிவு களில் மின்மாற்றிகளைப் பழுதுபார்க்க அடிப்படைப் பணியாளர்கள் இல்லை. ஒரு பிரிவில் 7 கம்பியாளர்கள் மற்றும் 7 கள உதவி யாளர்கள் என குறைந்தபட்சம் 14 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 1 அல்லது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன்  காரணமாக மின் பழுது, பாராமரிப்பு உள்ளிட்ட  பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நட வடிக்கை எடுக்க முடியாமல் காலதாமதம்  ஏற்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிக மாக உள்ள இந்த நேரத்தில் முறையாக மின்சாரம் வழங்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் மின்  பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்  அலுவலகக் கட்டடத்தை, விரைவில் சொந்தக் கட்டடத்தில் செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அலுவலகம் கட்டுவதற்காக 10 ஆண்டு களுக்கு முன்பே திருப்பத்தூரிலிருந்து, ஜல காம்பாறை செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தையொட்டி சுமார் 3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டடம் கட்ட போதிய முயற்சிகளை அதிகாரி கள் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படு கிறது. இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரியிடம் கேட்டதற்கு, அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை யால், இங்கு பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களும், பழைய பணி யையே செய்ய வேண்டிய நிலை உள்ளது. விரைவில் பணியாளர்களை நியமிக்க உயர்  அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள் ளோம். மேலும் சொந்தக் கட்டடம் கட்ட அனுப்பிய மண் பரிசோதனையில், அங்கு  கட்டடம் கட்ட மண்ணின் வளம் தகுதியுடைய தாக இல்லை. எனவே அஸ்திவாரத்தின் பலத்தை கூடுதலாக்க வேண்டும். இதுகுறித்த  கட்டடத்தின் மறு மதிப்பீடு அனுப்பப் பட்டுள்ளது. ஆணை வந்தவுடன் கட்டடப் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

வியாபாரிகள் கணக்கெடுப்பிற்கு பிறகு தேர்தலை நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 21- புதுச்சேரி சாலையோர நடை பாதை வியாபாரிகளை கணக்  கெடுத்த பின்பே விற்பனைக்குழு தேர்தலை நடத்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி பிரதேச சாலை யோர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியு) பேரவைக் கூட்டம் வெங்கட்டா நகர் தமிழ்ச்  சங்கத்தில் துணைத் தலைவர்  வடிவேலு தலைமையில் நடை பெற்றது. சிஐடியு பிரதேசத் தலை வர் கே.முருகன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செய லாளர் சீனுவாசன், இணைச்செய லாளர் பிரபுராஜ், சங்க நிர்வாகி கள் அழகர்ராஜ், பாலாஜி உள்ளிட்ட  ஏராளமான சாலையோர வியா பாரிகள் கலந்து கொண்டனர்.  புதுச்சேரி சாலையோர வியா பாரிகளுக்கு அடையாள அட்டையை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி விற்பனைக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்  டும், விற்பனைக் குழுவை   அங்கீ கரிக்கப்பட்ட சங்க பிரதிநிதி களைக் கொண்டு தேர்தல் நடத்திய பின்பே  தேர்வு செய்ய வேண்டும், காவல்துறை மூலம் வியாபாரிகளை அச்சுறுத்தும் நட வடிக்கையை நகராட்சி நிர்வாகம்  கைவிட வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங் கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.