tamilnadu

கிருஷ்ணகிரி, வேலூர் முக்கிய செய்திகள்

பிஎஸ்வி கல்லூரியில் மின்னணுவியல் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, அக். 9- சென்னை தேசிய நெடுஞ்சாலை மிட்டப் பள்ளி யிலுள்ள பிஎஸ்வி பொறியி யல் தொழில்நுட்பக் கல்லூரி யில் மின்னணுவியல், தொலை தொடர்பியல் துறை  கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயலாளர் விவேக், இணை இயக்குநர் புஷ்பா செல்வம், துணைச்  செயலாளர் சாந்த மீனா முன்னிலை வகித்தனர். முதல்வர் லாரன்ஸ் இன் றைய சூழலில் பொறியியல் துறையின் தேவை, வேலை  வாய்ப்புகள் பற்றி பேசி னார். பிஎஸ்எஸ்எல் மென் பொருள் நிறுவனத்தின் நிறு வனர் ஞானசேகரன் விளக்கி னார். ஆராய்ச்சி மாண வர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட  கட்டு ரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த கட்டுரைகள் தேர்ந் தெடுக்கப்பட்டு  அதை எழுதி யவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில்  மாணவர்கள், பேராசிரி யர்கள் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். துறைத் தலைவர் முனைவர் தமிழரசி நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு கலைப் போட்டிகள்

வேலூர், அக். 9- தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை யின் கீழ் செயல்படும் ஜவாஹர் சிறுவர் மன்றம்  சார்பில் வேலூர் மாவட்ட கலைப் போட்டிகள்  ஆற்காடு நகரிலுள்ள லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளியில் வரும் அக்டோபர் 19-ஆம்  தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.  குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நட னம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது  என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குரலிசை (வாய்ப்பாட்டு) பிரிவில் மாண வர்கள் தனியாகப் பாடல் பாட வேண்டும். இதில் தமிழ், மேற்கித்திய இசைப் பாடல்கள்,  தேசபக்தி பாடல்களைப் பாடலாம். திரைப்பட  பாடல்களுக்கு அனுமதியில்லை. பரத நாட்டி யம், நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவு களில் முழு ஒப்பனை, உரிய உடைகளுடன்  நடனம் இருத்தல் வேண்டும். குழு நட னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தி யங்களையோ, ஒலி நாடாக்களையோ, குறுந்  தகடுகளையோ பயன்படுத்திக் கொள்ள லாம். அதற்கான கருவிகளைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள  வேண்டும். ஓவியம் பிரிவில் 40-க்கு 30 செ.மீ. அள வுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். ஓவியத் தாள், வண்ணங்கள், தூரி கைகள் உள்ளிட்ட பொருள்களை போட்டி யில் பங்கேற்பவர்களே கொண்டு வர வேண்டும். போட்டி தொடங்கும்போது தலைப்பு அறிவிக்கப்படும்.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி, வயது சான்றிதழ்களைப் பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களின் விவ ரத்தை தொலைபேசியில் தெரிவிக்கப்படும். இதில், 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயதுப்  பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவர்.. மேலும் விவரங்களுக்கு 79048  40320 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சி யர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.