கிருஷ்ணகிரி, அக். 26- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இந்தியன் வங்கியில் கடன் கேட்டுச் சென்றவரை வங்கி உதவி பொது மேலாளர் கன்னத்தில் குத்தியதாக புகார் எழுந்துள்ளது. தொழிலை விரிவுபடுத்த போச்சம்பள்ளி இந்தியன் வங்கியில் கடன் கேட்டு மனு அளித்திருந்த நிலையில் ஆறு மாதங்களாக வங்கி மேலாளர் அலைக்கழித்ததாகவும், தற்போது கடன் அளிக்க மறுத்ததாகவும், பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முரு கேசன் என்பவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பான வாக்குவாதத்தை முரு கேசன் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை கண்ட வங்கி உதவி பொது மேலாளர் சீனிவாசன் முருகேசன் கன்னத்தில் குத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகேசன் வங்கி முன்பு குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயன்றார். தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி காவல்துறையினர் தடுத்து விசாரித்து வருகின்றனர்.