tamilnadu

img

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 09

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: இரவுக் காவலர்

காலியிடங்கள்: 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மை, நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 198 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து சான்றொப்பமிட்டு, அதனுடன் சுய விலாமிட்ட ரூ.25க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்.1/304-4, 3 ஆவது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி - 635 002.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in//resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.