கிருஷ்ணகிரி, ஆக. 29- ஓசூர் வட்டத்தின் தலைமை அளவை யாளர் ஏழை, எளிய மக்கள், விவ சாயிகளிடம் பட்டா, பெயர் மாற்றத் திற்கு 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு நில அளவை செய்யா மலும், பட்டா, பெயர் மாற்று சான்றுகள் தராமல் 3 ஆண்டுகளாக இழுத்தடிப்ப தோடு மிரட்டியும் வருவதாக ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். பேகேபள்ளி ஊராட்சி நல்லூர் அக்ர காரத்தில் வசிக்கும் லொகேஷ் ரெட்டி யும், சேவகாணப்பள்ளி ஊராட்சி கொத்தப்பள்ளி கிராம் கிருஷ்ணா ரெட்டியும் தன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுச் சான்றுக்கு ஆதாரங்களுடன் 5.3.2018 இல் முறைப்படி விண்ணப்பித்துள்ளார். தலைமை அளவை யாளர் ராஜா 50 ஆயிரம் வரை கேட்டு 20 ஆயிரம் வாங்கிய தாகவும், 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அளந்து பட்டா கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். அளவையாளர் ராஜாவிடம் கேட்டால் தான் பெரும்புள்ளிகளின் சொந்தக்காரன் என்றும் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியுள்ளார். அளவையாளர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், ஓசூர் சாராட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.