tamilnadu

img

கால்வாய் அடைப்பு - குடியிருப்புகளுக்குள் நீர் புகும் அபாயம்

உதகை, ஜன. 13- வீடுகளை இடித்து  மண் மற்றும்  செங்கல் உள்ளிட்ட பொருட்களை கால்வாயில் கொட்டுவதால் உதகை படகு இல்லத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்புகளுக்கு உள்ளே  புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்ல ஏரியின் கடைக்கோடியில் உள்ளது கஸ்தூரிபாய் காலனி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த காலனியை ஒட்டி அமைந்துள்ள கால்வாய் வழியாக ஓடுகிறது. மேலும் இந்த கால்வாயை ஒட்டி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானமானது சுற்றுலா பய ணிகளின் வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்பட்டு வருகிறது.  ஆனால், தற்போது இந்த மைதா னத்தில் வீடுகளை இடித்து மண் மற் றும் செங்கல் உள்ளிட்ட பொருட்களை கொட்டிவிட்டு செல்கின்றனர். இத னால் இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு படகு இல்லத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்புக ளுக்கு உள்ளே புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப் பட்ட துறையினர் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;