tamilnadu

img

உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வில்லனும், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச அணியைப் பற்றி இன்று பார்ப்போம்.  

கேப்டன் : மஷ்ரபே மோர்டஜா

பேட்ஸ்மேன்கள் : தமீம் இக்பால், சௌம்யா சார்க்கர், ஷப்பீர் ரஹ்மான்.  

ஆல்ரவுண்டர்கள் : மஹமதுல்லாஹ் (சுழல்), முகமது சைபுதின் (வேகம்), மோசடேக் ஹுசைன் (சுழல்), சாகிப் அல் ஹாசன் (சுழல்), மெஹிதி ஹாசன் (சுழல்), 

விக்கெட் கீப்பர்கள்: லிட்டோன் தாஸ், முஷ்பிகுர் ரஹ்மான், முகமது மிதுன், 

பந்துவீச்சு: மஷ்ரபே மோர்டஜா (வேகம்), முஸ்டாபிஜூர் ரஹ்மான் (வேகம்), ருபேல் ஹாசன் (வேகம்), அபு ஜயேத் (வேகம்)      

சிறப்பு: எந்த தொடராக இருந்தாலும் சரி வங்கதேச அணியிடம் சற்று ஜாக்கிரதையாகத் தான் விளையாட வேண்டும். சற்று அசந்தால் ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் வெற்றியை வசப்படுத்தி விடும். எதிரணி சீண்டினால் ஆக்ரோஷமாக விளையாடும் கோபக் குணம் உடையவர்கள். எதிரணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் தயக்கமின்றி துரத்தி செல்லும் திறன் உடைய வீரர்கள் அணியில் உள்ளனர்.

பலம் : ஆஸ்திரேலிய அணியைப் போல வேகப்பந்துவீச்சு யூனிட்டுடன் களமிறங்குவது வங்கதேச அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவான பார்மில் உள்ளதால் டாப் ஆர்டரில் பிரச்சனை ஏற்படாது.5 ஆல்ரவுண்டர்கள் களமிறங்குவதால் பகுதி நேரப் பந்துவீச்சுக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் இங்கிலாந்து உலகக்கோப்பை தொடருக்குப் பலமான அணியாக களமிறங்குகிறது.  

பலவீனம் : தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினால் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பார்கள்.தொடக்கம் சொதப்பினால் சீட்டுக்கட்டு போலச் சரிந்துவிடுவார்கள். பந்துகளின் பிட்களை அடிக்கடி மாற்ற மாட்டார்கள்.ஒரு ஓவரில் 4 பந்துகளை ஒரே பிட்சில் வீசுவார்கள்.10 ஓவருக்கு பின்பு சுழற்பந்து வீச்சை தேர்வு செய்து அணியை கட்டுப்படுத்தி கடைசி பவர் பிளே ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவார்கள்கள். இது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லதல்ல.  

மாற்ற வேண்டியவை : பந்தின் பிட்ச் வகைகளை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் உன்னிப்பாக கவனித்து ஆடுவார்கள்.இதனால் பந்துவீச்சில் பிட்சை மாற்றுவது நல்லது.காயத்தால் அவதிப்படும் சாகிப் அல் ஹாசனை நம்பியே ஒட்டுமொத்த அணி உள்ளதால் மோசமான பின்விளைவை உருவாக்கும்.பலமான வேகப்பந்து யூனிட் இருப்பதால் 15 ஓவர்களுக்கு பின்பு சுழற்பந்து வீச்சைக் களமிறக்கலாம்.  

உலகக்கோப்பையில் எப்படி? 

விண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இணையான பலத்துடன் களமிறங்கு வதால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் தான். ஆனால் அசுர பலமுடைய இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளைச் சமாளிப்பது சிரமமான 

விஷயம் தான்.அதிர்ச்சி வைத்தியம், அதிரடி முடிவுகள் ஏதேனும் நடந்தால் வங்கதேசம் அணி அரையிறுதி வரை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நாளை இங்கிலாந்து...

;