tamilnadu

img

ரிஷப் பண்டிற்கு ஐசிசி அனுமதி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக் கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.   

இந்த ஆட்டத்தில் இந்திய  அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு  இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு  ஏற்பட்டது.  மூன்று வாரக் காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ அறிக்கை கூற இந்திய அணியில் இருந்து தவான் விலகினார். தவானுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்டை அணியில் சேர்த்துக்கொள்ள  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை போட்டிக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி கோரியிருந்தது. அக்குழு தவானின் காயம் தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து மாற்று வீரராக ரிஷப் பண்டை சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.