tamilnadu

img

இந்தியச் சுற்றுப்பயணம் ... மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

ஜமைக்கா                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் டிசம்பர் 6-ஆம் தேதி (டி-20) அன்று தொடங்கும் நிலையில், இந்த இரு போட்டிகளுக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. கீரன் பொல்லார்டு தலைமையில் களமிறங்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல், டுவைன் பிராவோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

டி-20 அணி
கீரன் பொல்லார்டு (கேப்டன்), பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மையர், ஹோல்டர், பிராண்டன் கிங், எவின் லெவிஸ், கீமோ பால், கேரி பியரி, நிகோலஸ் பூரான், தினேஷ் ராம்தின், ரூதர்போர்ட், லெண்ட்ல் சிம்மன்ஸ், ஹேடன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

ஒருநாள் அணி
கீரன் பொல்லார்டு (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மையர், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஷப், பிராண்டன் கிங், எவின் லெவிஸ், கீமோ பால், கேரி பியரி, நிகோலஸ் பூரான், ரொமாரியோ ஷெபர்ட், ஹேடன் வால்ஷ்.

;