நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது.2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (வெல்லிங்டன்) நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், சனியன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றிக் காக வரிந்து கட்டுவதால் 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் : ஹாக்லே ஓவல், கிறிஸ்ட்சர்ச் / நேரம் : சனியன்று அதிகாலை 4 மணிக்கு