கிரிக்கெட் உலகில் மூடநம்பிக்கையை அதிகம் கடைப்பிடிப்பது இந்திய அணி மட்டுமே. ஏனென்றால் ஜெர்சியின் (உடை) வண்ணம் முதல், எண்களின் வரிசை வரை என அனைத்திலும் மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது. ஒரே வண்ணம், ஒரே டிசைன் என ஏறக்குறைய 4 வருடத்திற்கு விளையாடுவார்கள். உலகக்கோப்பையில் தோல்விகண்டால் ஜெர்சி மற்றும் ஸ்பான்சரை மாற்றிவிட்டு அடுத்த கட்ட மூடநம்பிக்கைக்கு மாறிவிடுவார்கள். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்த மாதிரியான மூடநம்பிக்கையில் ஆர்வம் காட்டாது.