வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து எம்எஸ் டோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் பெங்களூருவில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், எம்எஸ் டோனி 56 ரன்கள் அடித்ததே இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதை ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டத்தின்போது முறியடித்தார்.