tamilnadu

img

ஆஷஸ் தொடரில் இனவெறி கோஷம்

இங்கிலாந்து அணி வீரர் ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியில் தனது முரட்டுத்தனமான பவுன்சரால் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித்தின் கழுத்தைப் பதம் பார்த்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஸ்மித் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் ஓய்விலிருந்தார். ஸ்மித்தின் இந்த நிலைமைக்குக் காரணமான ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. மேற்கு இந்தியத் தீவுகளின் ஒருபகுதியான பார்படாஸில் பிறந்தவர். கடுமையாகப் போராட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு சிட்னி மார்னிங் ஹெரால்ட் நிறுவனம் இனவெறி தாக்குதல் நடத்தும் விதமாகச் செய்தி வெளியிட, இதனைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டனர். இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் இதே நிலைமை ஏற்பட்டது. ரசிகர்கள் மூலமாக அல்ல, ஊடகத்தின் மூலமாக.

;