355 விக்கெட் எடுத்த ஷமி எங்க ஒத்த ஓட்டு வாங்குன பாஜக எங்ககே என்ற வாசகத்தை டி20 உலகக் கோப்பை நேற்றைய ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் கையில் ஏந்தி ஷமிக்கு ஆதரவு தெரிவித்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் முதல்போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்களை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் அவரது மதத்தைக் குறிப்பிட்டு பலர் அவதூறு கரத்துக்களைப் பரப்பினர்.
இந்நிலையில் நேற்று இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்திய ரசிகர் ஒருவர் மைதானத்தில் முகமது ஷமி இந்தியாவிற்காக 355 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால், பா.ஜ.க மொத்த ஓட்டு 1 என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தி இந்திய வீரர் முகமது ஷமிக்கு எதிராகக் கருத்து பரப்பியவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.