tamilnadu

img

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிலான்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலான்டர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் வெர்மன் பிலான்டர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார். 34 வயதான பிலான்டர் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில்தான் அதிகமாக விளையாடியுள்ளார். இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளி்ல் விளையாடியுள்ள பிலான்டர் 216 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 13 முறை 5 விக்கெட்டுகளாகும். அதேபோல 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிலான்டர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.