tamilnadu

img

இந்தியாவிடம் தோல்வி எதிரொலி

உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்த்த இந்த போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்தது.   இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் வீரர்களின் புகைப்படத்தைத் தீயிட்டுக் கொளுத் தினர். சில ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டியை நொறுக்கியெடுத்தனர்.   கிரிக்கெட் உலகில் இது வழக்கமான செயல் தான் என்றாலும், பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், “இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்விகண்ட பாகிஸ் தான் அணிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்’’ எனக் கூறி மனுதாக்கல் செய்துள்ளார்.  மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டார். கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும் வழக்கு தொடரும் அளவிற்குப் பாகிஸ்தான் அணியின் தோல்வி ரசிகர்களைப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.