கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை தொடரின்போது, வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மார்ச் 19-ல் காலேயில் தொடங்குகிறது. அதற்கு முன் மார்ச் 7-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் தேதி வரையும், மார்ச் 12-ஆம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை தொடரின்போது, வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சில வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டனர். ஒன்றிரண்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.