tamilnadu

img

இயன் சேப்பலுக்கு தோல் புற்றுநோய்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்று புகழப்படும் சேப்பல் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் வெயிலில் அதிகமாக அலைந்ததால் புறஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை  உண்டாகியுள்ளன. இதையடுத்து சேப்பலுக்கு  5 வாரங்களாகக் கதிரியக்கம் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, தோள்பட்டையிலிருந்து தோல் புற்றுநோய்த்தன்மை  தற்போது நீக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் பங்கேற்கச் சேப்பல் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.