சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் (453) எட்டிய சாதனையை சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா (விண்டீஸ்) ஆகியோர் கூட்டாக தங்கள் கைவசம் வைத்துள்ளனர். இந்த சாதனையைத் தகர்க்க ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், இலங்கை வீரர்கள் சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகியோர் கடுமையாக போராடியும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், கிரிக்கெட் உலகின் “ரன் மெஷின்” என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 131 டெஸ்ட், 222 ஒருநாள், 62 டி-20 போட்டிகள் என மொத்தம் 415 இன்னிங்ஸ்களில் விளையாடி 19,896 ரன்களை குவித்துள்ளார். சச்சின், லாரா சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 104 ரன்களே தேவைப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக கோலி சதமடித்தால் குறைந்த இன்னிங்ஸில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.