மேற்கு இந்திய தீவுகளைச் (விண்டீஸ்) சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாமுவேல் சிசில் ரைட் ஜமைக்கா வில் 1933-ஆம்ஆண்டு பிறந்து, 1959-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றார். இங்கிலாந்து நாட்டின் லங்காஷயர் லீக்கில் கிரிக்கெட் நிபுணராக வாழ்க்கை யைத் தொடங்கிய சிசில் ரைட், கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் (1970 - 1980) காலத்தில் முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். சிசில் ரைட் விண்டீஸ் அணிக்காக விவ் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னருடன் இணைந்து விளையாடியுள்ளதாக கூறப்படுகிறது. எனி னும் நாட்டுக்காக விளையாடிய புள்ளிவிவ ரங்கள் இன்னும் முழுமையாக தெரிய வில்லை. லங்காஷயர் லீக்கில் விளையாடிய போது ஐந்து சீசன்களில் 538 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் சிசில் ரைட் (60 ஆண்டுகளில்) 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இஎஸ்பிஎன் கிரீக் இன்போவில் இதற்கான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. சிசில் ரைட் கிரிக்கெட் வாழ்க்கை விவரங்கள் அனைத்தும் சர்ச்சை அந்தஸ்தில் உள்ள நிலையில் வியாழனன்று தனது 85வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார். தள்ளாத வயதிலும் கிரிக்கெட் ஆர்வ த்துடன் இருந்த சிசில் ரைட் தாத்தாவிற்குச் செப்டம்பர் 7-ஆம் தேதி ஓய்வு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.