tamilnadu

img

இன்னும் 1 நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019

லீட்ஸ்

1890-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18,350 பேர் அமரலாம். உலகக்கோப்பைக்குச் சிறப்பு வசதியும் உள்ளன.
தன்மை : பவுன்சர் அதிகமாக எகிறும்.சுழற்பந்து வீச்சு தாறுமாறாகத் திரும்புவதால் பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் ஏற்படும். துடிப்பாக பேட்டிங் செய்தால் நன்கு ரன் குவிக்கலாம்.

உலகக்கோப்பை ஆட்டங்கள் 
ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (ஜூன் - 1)
பாகிஸ்தான் - இலங்கை (ஜூன் - 7)
வங்கதேசம் - இலங்கை (ஜூன் - 11)

செஸ்டர் லே ஸ்ட்ரீட் 

நவீனக் காலத்தில் (1995) உருவாக்கப்பட்ட இந்த குட்டி மைதானத்தில் 19,000 (சர்வதேச போட்டிக்கு மட்டும்) அமரலாம்.
தன்மை : பந்து மிதமாக எகிறும். பவுன்சரும் நெஞ்சிற்கு மேல் பலமாகத் தாக்கும். பந்தைக் கவனமாகக் கணித்தால் ரன் குவிக்கலாம், காயத்திலிருந்து தப்பலாம்.

உலகக்கோப்பை ஆட்டங்கள்

இலங்கை - தென் ஆப்பிரிக்கா (ஜூன் - 28)
இலங்கை - விண்டீஸ்  (ஜூலை - 1)
இங்கிலாந்து - நியூஸிலாந்து (ஜூலை - 3) 

இந்திய அணியின் லீக் ஆட்டங்கள்

தென் ஆப்பிரிக்கா    (ஜூன் 5 - சவுதாம்ப்டன்) 
ஆஸ்திரேலியா    (ஜூன் 9 - ஓவல்)
நியூஸிலாந்து    (ஜூன் 13 - நாட்டிங்காம்)
பாகிஸ்தான்    (ஜூன் 16 - மான்செஸ்டர்) 
ஆப்கானிஸ்தான்    (ஜூன் 22 - சவுதாம்ப்டன்)
விண்டீஸ்    (ஜூன் 27 - மான்செஸ்டர்)
இங்கிலாந்து    (ஜூன் 30 - பிர்மிங்காம்) 
வங்கதேசம்    (ஜூலை 2 - பிர்மிங்காம்) 
இலங்கை    (ஜூலை 6 - லீட்ஸ்)