tamilnadu

img

லாலிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணியிலிருந்து பாலே விலகல்

ஸ்பெயின் கால்பந்து கிளப் தொடரான லாலிகா தொடரின் ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோவால் நட்சத்திர அந்தஸ்து பெற்றது. ரொனால்டோ ஜுவென்டஸ் (இத்தாலி கிளப்) தாவிய பின்பு ரியல் மாட்ரிட் அணி திணறியது. அணியை மீண்டும் பார்முக்கு கொண்டு வர ஜிடேன் பயிற்சியாளராக நியமித்தும் பலனில்லை. இந்நிலையில் ரொனால்டோ விட்டு சென்ற பணியைக் கவனமாகக் கையாண்டு வரும் முன்கள வீரரான காரத்  பாலே ரியல் மாட்ரிட்லிருந்து விலகி வேறு அணிக்கு செல்லவுள்ளதாகப் பயிற்சி யாளர் ஜிடேன் தெரிவித்துள்ளார்.   30 வயதான் பாலேவின் ரியல் மாட்ரிட் ஒப்பந்தம் இன்னும் 3 ஆண்டு கள் உள்ள நிலையில், மான்செஸ்டர்  யுனைடெட், பெயன், டோட்டன் ஹாம் ஆகிய மூன்று அணிகளில் ஏதாவது ஒன்றுக்குச் செல்ல விருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.  ஏற்கெனவே ரொனால்டோ இல்லாமல் கத்துக்குட்டி அணிகளிடம் உதை வாங்கிக் கொண்டி ருக்கும் ரியல் மாட்ரிட் அணி காரத் பாலே விலக இருப்பது அந்த அணி ரசிகர்களிடம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.