கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசியத் தடகள தொடரின் மகளிர் 800 மீ ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து (30) தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். தடகள உலகின் சம்பிரதாய சோதனை யான ஊக்க மருந்து பரிசோதனை கோம திக்கு நடத்தப்பட்டது.முதல் கட்டமான “ஏ” மாதிரி சோதனையில் கோமதி நான்ட்ரோ லோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை உட்கொண்டிருப்பது தெரியவந்ததால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது. ஊக்க மருந்து சோதனை முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோமதி தன் மீதானகுற்றச்சாட்டை மறுத்தார். இந்நிலையில், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள கத்தார் சென்றுள்ள கோமதி தன்னிலை விளக்கத்துடன் வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், “ஏதேதோ பெயர்களில் ஊக்கமருந்து இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அந்தப் பெயர்களை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை. தற்போது டோப் டெஸ்டின் (ஊக்க மருந்து பரிசோதனை) அடுத்த படியான “பி” மாதிரி சோதனைக் காக கத்தார் வந்துள்ளேன்.”பி” மாதிரி சோதனையில் வெற்றி பெற்று, தன் மேல் குற்றமில்லை என்பதை நிரூபிக்கும் வரை தான் ஓயப்போவ தில்லை” என்று தெரிவித்துள்ளார்.“ஏ” மற்றும் “பி” மாதிரி சோதனைகள் இரண்டுமே ஒரே அடிப்படை சோதனை தான். இரண்டு முடிவுகளும் பெரும்பாலும் ஒரேமாதிரி தான் இருக்கும்.மாற்றம் ஏதும் ஏற்படாது.”ஏ” மாதிரி சோதனையில் குளறுபடி ஏதேனும் இருந்தால் “பி” மாதிரி சோதனைசாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.