காஞ்சிபுரம், அக். 12 - வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளை யும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சஙகம் வலியுறுத்தி உள்ளது. விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் வட்ட சிறப்பு பேரவை ஊவேரி சத்திரத்தில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், 2018-2019ல் பயிர் காப்பீடு செலுத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் ஜி.மோகனன், செயலாளர் கே.நேரு ஆகியோர் பேசுகையில், கோலப்பன் குழு பரிந்துரைபடி விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், 60 வயது கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.3000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்றனர். பேரவைக்கு கே.சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகி கள் லாரன்ஸ், ஆறுமுகம், ஆனந்தவேல், சிவலிங்கம், முரளி, ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.