தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉ ள்ளது. 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் அதிகாலை 3 மணியளவில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பேருந்தில் பயணித்த 2 பேரும் பலியாயினர். ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. இன்றுஅதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.