tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தந்தை பெரியார் பெயரின் மீது காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து கச்சராயபாளையத்தில் செவ்வாயன்று (ஜூலை 28) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் எம்.கே.பழனி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வே.ஏழுமலை, துணை செயலாளர் சிவக்குமார், வெங்கடேசன் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.