பெங்களூரு:
கர்நாடக முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று அத்தனை சித்துவேலைகளிலும் அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், எடியூரப்பா கர்நாடக முதல்வராக வேண்டும் என்பதற் காக, பாஜக பெண் எம்.பி.யான ஷோபா, வெள்ளிக்கிழமையன்று சாமுண் டீஸ்வரி கோயிலுக்கு 1001 படிகள் வழியாக ஏறிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.