tamilnadu

ஊழியர் விரோதப் போக்கில் செயல்படும் மருத்துவமனை டீன் மார்ச் 12 தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 4- கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணி லாவை கண்டித்து அனை த்து தொழிற்சங்க கூட்டமை ப்பினர் சார்பில் மார்ச் 12  அன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட அனை த்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  சிஐடியு சங்க கரூர் மாவ ட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் தலைமை வகித்தார்.  எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலை வர் வி.கணேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், அரசு ஊழியர் சங்க மாவ ட்ட பொருளாளர் பொன்ஜெ யராம், தமிழ்நாடு அரசு மரு த்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநிலச் செயலாளர் செல்வராணி, மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவ ர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் முதல்வராக ரோஸி வெண்ணிலா பொறு ப்பேற்றதிலிருந்து மருத்துவ மனையில் நிரந்தர ஊழிய ர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என அனைவர் மீதும் பழிவா ங்கும் வகையில் செயல்பட்டு  வருகிறார். மருத்துவம னையில் பணிபுரியும் செவிலி யர்கள் தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை தமி ழ்நாடு அரசு ஊழியர் சங்க த்தின் மாநிலத் துணைத் தலை வர் என்ற முறையில் மருத்து வமனையில் பணிபுரியும் தலைமை மருந்தாளுநர் மு.சுப்பிரமணியன் போரா ட்டத்தை வாழ்த்தி உரை யாற்றினார்.  இதனால், மருத்து வமனையின் டீன் ரோஸி  வெண்ணிலா, தலைமை மரு ந்தாளுனர் மு.சுப்பி ரமணியன் மற்றும் செவிலி யர்கள் 4 பேரையும் தற்காலி கமாக பணியிடை நீக்கம் செய்து தண்டித்தார். 8 மாதங்கள் பணியிடை நீக்கத்திற்கு பிறகு மீண்டும் பிப்.4 அன்று பணி க்கு திரும்பியுள்ளனர். தற்போது இதையும் ஏற்றுக் கொள்ளாமல், மு.சுப்பி ரமணியன் மற்றும் நான்கு செவிலியர்களையும் தொ லைதூர மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்து ரோஸி வெண்ணிலா உத்தர விட்டுள்ளார். ஊழியர் மீது காழ்ப்பு ணர்ச்சியுடன் தண்டனைகள் விதிக்கிற முதல்வர் ரோஸி  வெண்ணிலாவின்  நடவடி க்கைகளை, கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில்  வன்மையாக கண்டிக்கி றோம். மேலும் ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட தண்ட னைகளை திரும்பப் பெறவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாக்கப்படவும், தமிழக அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுத்திடவும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் முதல்வர் ரோஸி வெண்ணிலாவின் ஊழியர் விரோத போக்கி னை கண்டித்தும், அனைத்து  தொழிற்சங்க கூட்டமை ப்பின் சார்பில் மார்ச் 12  அன்று மாலை 5 மணிக்கு,  கரூர் ஆர்.எம்.எஸ் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பா ட்டம் நடத்தப்படும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;