tamilnadu

நூறு நாள் திட்ட அதிகாரிகளின் வசூல் வேட்டை அடிபணியும் தொழிலாளருக்கு ஒரு குடம், கேள்வி கேட்பவருக்கு 25 குடம் தண்ணீர்

கரூர், ஜூன் 13- கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ஆரியூர் ஊராட்சி சின்ன முத்தம்பாளையம், வேலா யுதம்பாளையம், நல்லி செல்லி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300 பேர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்த பணிக்கு வரும் ஒவ்வொருவரிடமும் வாரம் தோறும் தலா நூறு ரூபாய் வாங்கி கொண்டு தான் வேலை கொடுக்கின்றனர். அப்படி கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு‌ நூறு நாள் வேலை கொடுப்பது இல்லை என்று தொழி லாளர்கள் கூறுகின்றனர். நூறு ரூபாய் ஏன் வாங்குகிறீர்கள் என்று கேட்டால் நூறு ரூபாய் கொடுத்தால் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் போதும், இல்லை என்றால் 25 குடம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.  மேலும் ஊராட்சி செயலர், பணி பொறுப்பாளர்கள் தான் இந்த செயலை மேற்கொள்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகளிடம் புகார் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கூறினர். நூறு நாள் வேலைக்கு செல்லும் போது பணி மேற்பார்வையாளர்கள் ஆறு நூறு ரூபாய் மற்றும் முன் னூறு ரூபாய் தர வேண்டும் என்று கேட்டனர். ஏன் என்று கேட்டதற்கு, ரூ. 600 கொடுத்தால் மாதம் முழு வதும் நூறு நாள் வேலைக்கு வரா மல் இருக்கலாம், ரூ.300 கொடுத்தால் 15 நாட்களுக்கு வேலைக்கு வரா மல் இருக்கலாம். ஆனால் அவர் களுக்கு மாதந்தோறும் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்கப் படும். மேலும் இந்த தொகையை கொடுக்க மறுத்ததால் 25 குடம் தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரை சுமார் 1 கிமீ தூரம் வரை சென்று அடிகுழாயில் அடித்து கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வயதான காலத்தில் எங்களை இவர்கள் மனசாட்சி இன்றி வேலை வாங்குகிறார்கள். இதற்கு மேல் கேள்வி கேட்டால் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறுகிறார்கள். எங்கள் உழைப்பை சுரண்டி அதன் மூலம் பணத்தை கொள்ளை யடித்து, ஊழல் செய்யும் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கிறோம் என்று தொழிலா ளர்கள் கூறினர். ஆரியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கருப்புசாமி கூறுகையில், ஆரியூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் மற்றும் பணியை மேற்பார்வையிடும் ஊழியர்கள் நூறு நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்களிடம் வேலைக்கான அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதில் வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த தாக வருகை பதிவேட்டில் பொய் யாக பதிவிட்டு அவர்களுக்கு ஊதி யத்தை வாங்கி கணக்கில் செலுத்தி, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்க வேண்டும் என கூறுவது, அவர்களுக்கு சொற்ப அளவில் தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொள்ளை யடித்து பங்கு போட்டுக் கொள் கின்றனர். இல்லை என்றால் அவர் கள் பணி அடையாள அட்டையை ரத்து செய்வதாக தொழிலாளர் களை மிரட்டுகிறார்கள். தற்போது இந்த ஊழல் தகவல்கள் வெளியில் வந்தவுடன் நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறும்படி சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மிரட்டல் விடுத்துள்ளனர் என்றார்.

சிபிஎம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் கே. கந்தசாமி கூறியதாவது: க.பரமத்தி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஆரியூர் ஊராட்சி யில் உள்ள நூறு நாள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாகவும், நூதன முறையில் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆரியூர் ஊராட்சி செய லர், பணி இடத்தில் மேற்பார்வை யாளர்களாக உள்ளவர்கள் ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து ரூபாய் 100 முதல் 600 வரை வசூல் செய்து அவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது டன், அவர்களை ஏமாற்றியும், மிரட்டியும் இச்செயலை செய்கின்றனர்.

ஒன்றிய அலுவலர் உறுதி
இந்த நூதனமான ஊழலால் அப்பாவி தொழிலாளிகள் பாதிக்கப் படுகின்றனர். இந்த ஊழல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புகார் வந்ததை அடுத்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் நேரடியாக பாதிக்கப்பட்ட தொழி லாளர்களுடன் புகார் தெரிவித்தது டன் அவர் தனக்கு இது பற்றி எது வும் தெரியாது என்று கூறினார். உட னடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர், பணியிட மேற்பார்வை யாளர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன், மேலும் இது போன்ற செயல்கள் நடக்காது என் றும் உறுதியளித்தார். ஆனால் இச் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மேலும் சம்பந்தப்பட்ட ஊழி யர்கள் மீது எவ்வித நடவடிக்கை யும் ஒன்றிய நிர்வாகம் எடுக்க வில்லை. இதற்கு மாறாக சம்பந் தப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் களை மிரட்டியும் எந்த விதமான பணமும் வாங்கவில்லை என்று எழுதி வாங்கி உள்ளதாக கூறுகின்ற னர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வன்மையாக கண்டிப்பதுடன், நூறு நாள் வேலைத் திட்டத்தில் அடை யாள அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்த விதமான நிபந்தனைகள் இன்றி உடனடியாக வேலை வழங்க வேண்டும், தகுதி உள்ள தொழிலா ளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் இந்த நூதனமான ஊழ லில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ஊரா ட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுத்திட வேண்டும், நட வடிக்கை எடுக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளை யும், பொதுமக்களையும் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெகுஜன அமைப்புக்கள் தலை மையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.