tamilnadu

பாம்பு வாங்குவதில் தகராறு துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்

கரூர், மே 20-குளித்தலை அருகே மண்ணுளிப் பாம்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்தசின்னையம்பாளையம் தாசில்நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி என்ற கெஞ்சாநாயக்கர்(80). கண்ணன்வட நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல்(38), ராஜா(40). இவர்கள் அனைவரும் மண்ணுளிப் பாம்பை பிடித்து, அவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த மாதம் இவர் களிடம் ரூ.40,000-க்கு பாம்பு ஒன்று வேண்டும் என்று கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுபாஷ்(40) என்பவர் கேட்டுள்ளார். இதற்கு கெஞ்சா நாயக்கர் உள்ளிட்ட மூவரும், பாம்புபிடித்து வைத்திருக்கிறோம் பணம்அனுப்பினால் நாங்கள் யாராவது ஒருவர் வந்து உங்களிடம் பாம்பை ஒப்படைக்கிறோம் எனக் கூறினார்களாம். இதையடுத்து உடனே சுபாஷ், பணத்தை வங்கி மூலம் அனுப்பினாராம். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட கெஞ்சாநாயக்கர் உள்ளிட்டமூவரும் பாம்பினை கொடுக்கவில்லையாம்.இந்நிலையில் கெஞ்சாநாயக்கர் உள்ளிட்ட மூவரும் சின்னையம்பாளையம் அடுத்த நாத்துப்பட்டி காளையார்நாயக்கர் தோட்டத்தில் இருப்பதாக சுபாஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுபாஷ், கொல் லத்தைச் சேர்ந்த முகமதுரபீக்(23), விவேக் என்ற அனு(22), நித்தீஷ்(27), நிதின்ஷ்ரா (23) ஆகியோர் ஒரு காரில்ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குநாத்துப்பட்டி காளையார் தோட்டத் திற்கு வந்துள்ளனர். அப்போது சுபாஷ்உள்ளிட்டோரிடம் ஏன் பணத்தை வாங்கி விட்டு இப்படி ஏமாற்றுகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தங்கவேல் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுபாஷ் உள்ளிட்ட 5 பேரையும் குத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமதுரபீக் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தங்கவேலுவின் முதுகில் சுட்டார். இதில்காயமடைந்த தங்கவேல் சுருண்டுவிழுந்ததும் அங்கிருந்து சுபாஷ் உள் ளிட்டோர் தப்பிக்க முயன்றுள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், அங்கிருந்த கிராம மக்கள் திரண்டு வந்து முகமதுரபீக், அனு, நித்திஷ், நிதின் ஆகியோரை பிடித்தனர். சுபாஷ்ஓடிவிட்டார். மேலும் துப்பாக்கி குண்டுபாய்ந்து காயமடைந்த தங்கவேலுவை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுமுகமதுரபீக் உள்பட 4 பேரையும் கைதுசெய்து, துப்பாக்கி மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கெஞ்சாநாயக்கர், ராஜா ஆகியோரிடமும் விசாரித்து வருகின்றனர்.

;