சிதம்பரம், ஜூலை 6- திருமுட்டம் அருகே பகலில் குளிக்க சென்ற பெண் 4 அடி உயர முருங்கை மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் மீட்கப்பட்டார். இது திட்டமிட்ட கொலை என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் தேன்மொழி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் ஸ்ரீராமன் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் தனலஷ்மி (42) கடந்த 4ஆம் தேதி பகல் 12 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த மோட்டார் கொட்டகையில் குளித்த மற்றொரு பெண்ணின் செல்போன் மூலம் ஏற்கனவே அவருக்கு பழக்கமாக இருந்த எழுந்திரவானம் குப்பம் கிரா மத்தைச் சார்ந்த பழனி என்பவருடன் பேசி யிருக்கிறார். பின்பு மோட்டார் கொட்டகைக்கு குளிக்கச் சென்ற தனலட்சுமியை காணவில்லை. அவ ரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது, அவர் திருமுட்டம் சாய்பாபா கோவிலுக்கு அருகே நான்கு அடி உயரமுள்ள முருங்கை மரத்தில் குத்துக்காலிட்டு அரை நிர்வாண கோலத்தில், தான் கட்டியிருந்த புடவையால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்த போது தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. வாய்க்காலில் இருந்து உடலை மேலே இழுத்தற்கான அடை யாளங்கள் இருக்கிறது என தனலட்சுமியின் தந்தை கலியபெருமாள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாய்க்காலில் உட்கார்ந்து சாப்பிட்ட ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. எனவே தனலட்சுமியின் மரணம் தற்கொலை அல்ல எனவும், திட்டமிட்டு தன லட்சுமியை கொலை செய்துள்ளதும் தெளி வாகத் தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட பழனியும் அவரது மகன்களையும் விசாரித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அதி கரித்துவரும் தலித் பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.