tamilnadu

img

கிராமப்புற வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை பெருக்கும் பனை பயிலரங்கம்

சிதம்பரம்,ஜன.12- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் கடலூர் மாவட்டம் தொழுதூரில் செயல்பட்டு வரும் ஜெஎஸ்ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சுதேசி பனை தொழில்கள் பயிற்சி மற்றும் தொழில்கள் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அண்மையில் பனை மரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பற்றிய பயிலரங்கத்தை நடத்தியது. தமிழக அரசின் மரமாக பனை மரம் உள்ள நிலையில் அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் அறியப்படாமலும், கிராமப்புறங்க ளில் அவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கப்படாத நிலையில் தமிழ கத்தின் பனை சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. மறுபுறம் தேசிய மற்றும் மாநில அளவில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பல இழப்புகளை தடுப்ப தில் பனை மரம் முக்கிய பங்கு வகித்து வரும் சூழலில் பனை மர சாகுபடி குறித்த விழிப்புணர்வு முக்கியத்து வம் பெறுகிறது. குறிப்பாக அதிகளவு இயற்கை சீற்றங்களின் தாக்கம் உள்ள கடலோர மாவட்டங்களில் பனை சாகுபடி ஒரு முக்கிய தேவையாக உருவாகி வருகிறது. அண்மையில் வெளியான உலக பொருளாதார அமைப்பின் (World Economic Forum) அறிக்கை யின்படி நமக்கு அருகில் உள்ள பங்களாதேஷ் நாடு சுமார் 5 மில்லியன் அளவிற்கு பனை மரங்களை தனது நாட்டில் நடவு செய்து இயற்கை சீற்றங்களால் வரும் பாதிப்பு கள் மற்றும் இழப்பீடுகளை வெகுவாக குறைத்துள்ளது. இத்தகைய சூழலில் நமது நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இயற்கை சீற்ற இழப்புகளை தவிர்க்க ஒருங்கிணைந்து செயல் பட்டு வரும் சூழலில் பனைமர சாகு படி மற்றும் வளர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனை அடிப்படியாகக் கொண்டும் பனைமர சாகுபடி யின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு களை கிராமப்புற மக்கள், விவசாயி கள், பண்ணை சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயத் தொழி லாளர்கள், கிராமப்புற இளை ஞர்கள் மற்றும் படித்த பட்டதாரிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வும், பனை சார்ந்த தொழில்நுட்பங் கள் வாயிலாக கிராமப்புறங்களில் ஏற்படும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் இப்பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியை முனைவர் பி.ரம்யா வர வேற்புரை வழங்கினார். பின்னர் தலைமையுரையாற்றிய ஜெஎஸ்ஏ வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் முனை வர் கோ.தாணுநாதன், மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்ப இன்று அதிகள வில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டு, கிராமங்களின் தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்றார். பின்னர் சிறப்புரையாற்றிய சுதேசி இயக்கத்தின் தலைவர் குமரிநம்பி, பனைமரத்தின் சிறப்பு கள், முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். சுதேசி தொழில்கள் பயிற்சி மற்றும் தொழில்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சித்ரா நம்பி பேசுகையில், பனை சார்ந்த தொழில்கள் குறித்தும், இதில் பெண்களுக்கு உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும் விளக்கிக் கூறினார். பனையாழி நிறுவனம் சார்பில் கு.தமிழ்க்கொடி, தமிழ்நாடு மரபு வழி சித்த மருத்துவ சங்கத்தின் வைத்தியர் கு.திருவாசகம் ஆகி யோர் பனை மரத்தின் மருத்துவ குணங்கள், பல நோய்களுக்கு பனைப் பொருட்கள் உட்கொள்ளும் போது ஏற்படும் தீர்வுகள் பற்றி விளக்கினர்.  ஜெஎஸ்ஏ   வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் சார்பில் முனைவர் கே.ஜெயராமன் மற்றும் முனைவர்  ஜெ.எஸ்.ஏ.  அருண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியை டி.அனந்தநாயகி நன்றி கூறினார்.

;