சிதம்பரம், செப்.21- சிதம்பரம் நகரத்திலுள்ள வடக்கு வடுக தெருவில் தனி யாருக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் 5-ஜி திறன் (அதிக கதிர்வீச்சு) கொண்ட செல்போன் கோபுரம் தெரு வின் முகப்பில் அமைக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து கடந்த மூன்று மாதங்க ளாக மக்கள் போராடி வரு கின்றனர். இந்த நிலையில் சனிக் கிழமையன்று (செப்.21) காவல்துறையின் பாது காப்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கள் நடைபெற்றது. இதனை யறிந்த அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம், 5-வது வார்டு கிளைச் செயலாளர் அஷ்ரப்அலி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.