tamilnadu

img

தேங்கும் மழை நீரை அகற்றக்கோரி உண்ணாநிலை

கடலூர், செப்19- விருத்தாசலம் வட்டம் கோமங்களத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற  கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.  வட்டக் குழு உறுப்பினர் வி.சிவஞானம் தலைமை தாங்கினார்.  கிளைச் செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து  வட்டார வளர்ச்சி அலுவலர், வரு வாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் நடத்தி உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்  படையில் போராட்டம் விளக்கி கொள் ளப்பட்டது.