tamilnadu

img

மீனவர்கள் வலையில் சிக்கிய மர்மப் பெட்டி

கடலூர், மார்ச் 5- கடலூர் அருகிலுள்ள தாழங்குடாவைச் சேர்ந்த 5 மீனவர்கள் சிவப்பிரகாஷம் தலைமையில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய மர்மப் பெட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  பின்னர், இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் சங்கீதா தலைமையிலான காவலர்கள் தாழங்குடா சென்று அந்த பெட்டியை கைப்பற்றி சோதனையிட்டபோது, கண்ணாடிகளை சுத்தம் செய்வதற்கும், பறவைகளுக்கு உணவாக அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் கிழிஞ்சல் பவுடர் இருப்பது தெரிய வந்தது. 30 கிலோ பவுடர் இருந்தது. இது கிலோ ரூ.400-க்கு விற்பனையாவதாக தெரிவித்தனர்.  பின்னர் இதுகுறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பொருளை அழித்து விடுமாறு அவர்கள் தெரிவித்ததாக கடலூர் பாதுகாப்புக் குழுமத்தினர் தெரிவித்தனர். ஹெராயினா? கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே இதே போன்ற மரப்பெட்டி ஒன்று மீட்கப்பட்டது. அதிலும், இதே பொருள் கண்டறியப்பட்டது. எனினும், அப்பொருள் குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போது கடலூரிலும் அதே மாதிரியான பெட்டி கிடைத்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.