tamilnadu

img

சிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... தெப்பக்குளமானது நடராஜர் கோயில்

சிதம்பரம்:
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெள்ளநீர் சூழ்ந்துள் ளது. ஆகாய தலமான நடராஜர் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரேவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை,திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.குறிப்பாக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. கொத்தவாச்சேரியில் 34 செ.மீ மழையும், அண்ணாமலை நகரில் 33 செ.மீ மழையும் லால் பேட்டையில் 30 செ.மீ மழையும் பரங்கிப்பேட்டை யில் 26 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.கடலூரில் கொட்டித் தீர்த்துவரும் அடை மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே சாலைகள் துண் டித்து போக்குவரத்தும் தடை பெற்றுள்ளன.

வெள்ளக் காடாக மாறிய கடலூர் நகரத்தில் மஞ்சக்குப்பம், புதுநகர், முதுநகர், சான்றோர் பாளையம், திருப்பாதிரிப்புலியூர் என பல்வேறு பகுதி குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணத்திற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அதேபோல் மிகப் பெரிய ஏரியான பெருமாள் ஏரி நிரம்பி விட்டதால்சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.சிதம்பரத்தில் 34 செ. மீட்டர் மழை பதிவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுகடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.  அதி தீவிர கனமழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் 34 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல அச்சமடைந்துள்ளனர். பல இடங்களில் சரியான வடிகால் வசதி இல்லாமல் இருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

;