tamilnadu

கடலூர், கிருஷ்ணகிரி முக்கிய செய்திகள்

தடையை மீறி விநாயகர் சிலை கரைப்பு: இந்து முன்னணியினர் மீது வழக்கு

கடலூர், ஆக. 23- பொதுமுடக்கத்தினால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை யில் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன்  தலைமையில் விநாயகர் சிலையை மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று அங்குள்ள பெரிய ஏரியில் கரைத்த னர். இதில், மாணிக்கமுருகன் அர்ச்சகர், இந்து முன்னணி நகரத்  தலைவர் யோகேந்திரன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி, விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு  நடத்தியதாகக் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை காவல் துறையி னர், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர், ஒன்றிய பொதுச்  செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றியத் தலைவர் ராஜூ,  ஒன்றிய துணைத் தலைவர் விக்கி, ஆர்எஸ்எஸ் பிரமுகர்  தமிழ்மணி உட்பட10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கடலூர்-புதுச்சேரி ரயில் திட்டத்தை துவங்கிடுக

கடலூர், ஆக. 23- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 27ஆம்  தேதி கடலூருக்கு நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய  வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:  கடலூரில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்காக 2010ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும், பணி கள் துவங்காத நிலையில் இதற்கான அறிவிப்பை வெளியிட  வேண்டும். கடலூர்- புதுச்சேரி- திண்டிவனம் இருப்பு பாதைத்  திட்டத்தை துவங்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால  கனவாகும். இந்த இரும்புப் பாதை திட்டத்தை உருவாக்கு வதன் மூலமாக திண்டிவனம் வழியாக சென்னைக்கு விரைந்து  செல்ல முடியும். எனவே இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து இந்த திட்டத்தை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம், மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், ஆட்சிய ரின் முகாம் அலுவலகம், கடலூர் கடற்கரை பகுதியில் உள்ள  கட்டிடங்கள், கடலூர் முதுநகரில் உள்ள பாரிஹவுஸ் உள்ளிட்டவை வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களாகும். இவைகளை பாதுகாத்து புராதன சின்னங்களாக பரா மரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள துப்புரவு அலுவலகத்தை மாற்றிடுக
கிருஷ்ணகிரி, ஆக. 23-பேரூராட்சியாக இருந்த மத்திகிரி, கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ஓசூர் நகராட்சியுடன் இணைக்ககப்பட்டது. மத்திகிரியில் ஏழை எளிய உழைப்பாளிகளே அதிகம் வசிக்கின்றனர். இங்கிருந்த முன்னாள் பேரூராட்சி அலுவ லகம் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால்  அதை ஒட்டியுள்ள துப்புரவு அலுவலகம் மற்றப்படாமலேயே உள்ளது. குப்பைகளை அகற்றும் நான்கு சக்கர வாக னங்களும், தள்ளுவண்டிகளும் குப்பைகளோடு ஆரம்ப சுகாதார நிலைய வாயில் வழியாக வந்து செல்கிறது. பல நேரங்களில், குப்பைகளோடும் வண்டி நிறுத்தப் படுகிறது. சில நேரங்களில் குப்பைகளை தரம் பிரிப்பதும் அங்கேயே நடைபெறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகில் இருந்த சமுதாயக் கூடம் ஏழை எளி யோரின் குடும்ப விழாக்கள், திருமணங்கள், ஊர் கூட்டங்கள்  நடத்த பயன்பட்டு வந்தன. மத்திகிரி பேரூராட்சி மாநக ராட்சியில் சேர்க்கப்படுவதற்கு முன்பே சமுதாயக் கூடம்  குப்பைக் கூடமாக மாற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், ஊர் பொதுமக்களும் சமுதாயக் கூடத்தை குப்பைக் கூட மாக மாற்றக் கூடாது என பல போராட்டங்கள் நடத்தியும், மனு  அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் ஒட்டியுள்ள துப்புரவுக் கூடத்தை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும், மீண்டும் சமுதாயக் கூடத்தை சீர்படுத்தி ஏழை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;