tamilnadu

கடலூர் முக்கிய செய்திகள்

குடிமராமத்து பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

கடலூர், அக். 26- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்,  பொருளாளர் எஸ்.தட்ஷணாமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.137.50 உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்ற குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படாமல் உள்ளதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளிலிருந்து வேளாண் விளை பொருட்களை வரியின்றி இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. இதனால் இந்திய விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் இதனை கண்டித்து ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நவம்பர் 4 ஆம் தேதி கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொது மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

கடலூர், அக். 26- புவனா காப்பியர் சர்வீஸ்  மற்றும் ஏ டூ இசட் சர்வீஸ்  கடலூர் ஆகியோர் இணைந்து கடலூர் நகர அரங்கில் பொது மக்கள்  பாதுகாப்புக்கு அன்றாடம்  பயன்படும்  வீடியோ, கதவு  கேமரா பயன்பாடு  அதன்  முக்கியத்துவம்  தொடர்பாக  பொது மேலாளர் பரூக்செரிப் செயல் விளக்கம்  செய்து காட்டினார்   முதியோர்கள் தனியாக இருக்கும் போது கதவை திறக்காமல் கேமரா உதவி யுடன் வருவர் யார் என்பதை  கண்காணிக்கலாம் உரை யாடலாம்  என்பதையும்  தொலைபேசி வாயிலாக நாம் வெளியே இருந்தாலும் அதை கண்காணிக்கலாம் என்பதை விளக்கினார். நிகழ்ச்சியை கடலூர் வியா பாரிகள் சங்கத் தலைவர்  வி.பி.எஸ்.கணேசன் துவக்கி வைத்தார். கடலூர் ஏஜென்சீஸ் உரி மையாளர்  வி.கருணாநிதி முன்னிலை வகித்தார். பிஎஸ் என்எல் துணைப்பொது மேலாளர்  சாந்தா, கடலூர் இந்தியன் வாங்கி மேலாளர் பாரதிராஜா ஆகியோர்  சிறப்பு விருந்தினராக  பங்கேற்றனர். நிகழ்ச்சியை  புவனா காப்பியர்  சர்வீஸ்  உரிமையாளர்  தேவநாதன், ஏ.டூ.இசட் பொறுப்பாளர் உமாபதி  ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். கடலூர் அனைத்து குடி யிருப்போர் நல சங்கத் தலைவர் பி.வெங்கடேசன், பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், இணை பொதுச்செயலாளர் டி. புரு ஷோத்தமன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி என்.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;