தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது நாளை காலைக்குள் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் அடுத்த இரண்டு தினங்களுக்கும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.