tamilnadu

img

சிஏஏ கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சிதம்பரம் அடுத்த  பு.முட்லூர் கிராமத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக ஒன்றியச் செயலாளர் முத்துப் பெருமாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், விசிக மாவட்டச் செயலாளர் அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் செல்லப்பன் உட்பட  பலர் கலந்து கொண்டு பேசினர்.