tamilnadu

img

‘சிவப்பு விளக்கு’ பகுதியில் முஸ்லிம் மகளிரே அதிகமாம்

புவனேஸ்வர்:
மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்களே அதிகள வில் உள்ளனர் என ஒடிசா பாஜக தலைவர், வாய்க் கொழுப்பாக பேசியுள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
முத்தலாக் முறை தடை செய்யப்பட வேண்டியதுதான் என்றாலும், இதனைச் சாக்காக வைத்து, இஸ்லாமிய ஆண்களை கிரிமினல் நட வடிக்கைக்கு உள்ளாக்கி பழிவாங்கும் வகையில், மத்திய பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோ தாவுக்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்நிலையில், ஒடிசா சட்டப்பேரவையில், பாஜக துணைத் தலைவர் பி.சி. சேத்தி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசி யுள்ளார். அப்போது, “மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ள னர்” என்று கூறியுள்ளார்.இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜே.டி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சேத்தியின் பேச்சை, அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியபோதும்,“எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக நான் விரோதம் எழுப்பும்வகையில் எதுவும் பேசவில்லை; ஆய்வு அறிக்கை களை அவையில் மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?” என்று தொடர்ந்து தனது பேச்சை சேத்தி நியாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சேத்தியின் பேச்சு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறி சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ விவாதத்தை முடிவுக்கு வந்துள்ளார்.

;