tamilnadu

img

கரையை கடந்தது பானி புயல்...

கோபால்பூரில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கடலில் இருந்த புயல் அடுத்த 3 மணி நேரத்துக்குள் கரையை எட்டி விட்டது குறிப்பிடத்தக்கது. பானி புயல் கரையைக் கடக்கும்போது 200 முதல் 230 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் புயல் இன்று காலை கரையை கடந்த போது பூரி மாவட்ட தென்பகுதியில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு பொறுப்பாளர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்தார். 


சில பகுதிகளில் மணிக்கு 175 கிலோ மீட்டர் முதல் 220 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறாவளி காற்று வீசியது.அப்போது புயலின் கண் என்று அழைக்கப்படும் மையப் பகுதி சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைதியாக சுழன்றபடி இருந்தது. பகல் 11 மணி அளவில் பானி புயல் முழுமையாக கடலில் இருந்து ஒடிசா மாநில தரைப்பகுதிக்குள் வந்திருந்தது. அதன் பிறகு புயலின் சீற்றம் மெல்ல மெல்ல குறைந்தது. என்றாலும் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் சூறாவளி காற்று வீசியதால் பாதிப்பு ஏற்பட்டது. பானி புயல் தாக்கும் என்று 3 நாட்களுக்கு முன்பே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக செய்ய முடிந்தது. இதன் காரணமாக உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெள்ளியன்று மாலை வரை பானி புயல் ஒடிசா மாநிலத்தில் இருக்கும்; இரவு அது மேற்கு வங்க மாநில பகுதிக்குள் செல்லும். சனிக்கிழமை காலை கொல்கத்தா அருகே புயல் மையம் கொண்டிருக்கும். அதன் பிறகு வங்க தேசத்துக்குள் பானி புயல் நுழையும். சனி முழுவதும் அந்த நாட்டின் வழியாக வட கிழக்கு திசையில் பானி புயல் நகரும். 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அசாம் மாநிலத்தை பானி புயல் எட்டும். அன்று பானி புயல் வலு இழக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;